மனதளவில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

#Lifestyle #people
Nilaat month's ago

உலகில் வாழும் அனைவருக்கு ஏதோ ஒருவகையில் மனரீதியாகவோ அல்லது எதிர் மறை எண்ணங்களாலோ பாதிக்கப்பட்டிறீர்கள். அந்த வகையில் மனதளவில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிய 5 வழிகள் உள்ளன அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம்.

1.உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வது

உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் பிரச்சினைகளையும் தவிர்த்து அல்லது உங்களைச் சுற்றி எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், நீங்கள் உணர்ச்சிரீதியாக பலவீனமானவர் என்று அர்த்தம், உங்களுக்கு உதவி தேவை.

2.நன்றாக இருப்பதாக தனக்குத்தானே பொய் சொல்வது

நீங்கள் அடிக்கடி உங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு, நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே நம்ப வைக்க முயற்சிக்கிறீர்களா? அது உங்களை மனதளவில் பாதிக்கக்கூடும்.

3.உங்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாமல் இருப்பது

சிறிய தவறுகளுக்காக ஒருவரை மன்னிக்க உங்களால் இயலவில்லை என்றால் உங்களுக்குள் ஒரு பிரச்சனை உள்ளது. இது நச்சு நடத்தை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

மேலும் அதனை மறக்க பழகுவது உங்களின் உடல் நலத்திற்கு நல்லது.

4.பாதுகாப்பின்மையை உணருகிறீர்களா??

நம் அனைவருக்குள்ளும் பாதுகாப்பின்மை உள்ளது, ஆனால் அதை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பது என்பதைப் பொறுத்தே நமது மகிழ்ச்சி உள்ளது.பாதுகாப்பின்மை உணர்வை அதிகரித்துக் கொண்டால் அது உங்களை மன ரீதியாக பலவீனமாகும்.

5.நீங்கள் நிறைவான வாழ்க்கையை வாழவில்லையா?

வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக நிமிடங்களையும் மணிநேரங்களையும் கடந்து செல்ல அனுமதிக்கிறீர்களா?

ஆம் எனில், நீங்கள் மோசமான மனநிலையில் உள்ளீர்கள்.