ஆறு நாட்களின் பின் வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்ணாமூச்சி விளையாடிய சிறுவன்

#Bangladesh #world news #Tamilnews #Lanka4
Prasuat month ago

பங்களாதேஷை சேர்ந்த வாலிபர் ஒருவர் தவறுதலாக கொள்கலனில் அடைக்கப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார்.

பதினைந்து வயது ஃபாஹிம், அவரது முதல் பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பங்களாதேஷின் சிட்டகாங்கில் இருந்து ஆறு நாட்கள் பயணம் செய்த கப்பல் மலேசியாவின் மேற்கு துறைமுகத்தில் வைத்து குறித்த இளைஞர் கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா தெரிவித்துள்ளது.

“ககொள்கலனில் அவர் மட்டுமே காணப்பட்டார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஃபஹிம் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், கொள்கலனுக்குள் ஒளிந்துகொண்டு உள்ளே பூட்டப்பட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஃபாஹிம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதிகாரிகள் அவரை சட்ட வழி மூலம் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.