தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே ஏரிக்கரை மீது ஏற முயன்ற ஆண் யானை மின்சாரம் தாக்கி பலி

#Tamilnews #Breakingnews #ImportantNews
Maniat day's ago

மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள பாப்பாரப்பட்டி பகுதி கிராமங்களில் நேற்றுமாலை காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்தது. பின்னர் அந்த யானை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்றுகாலை அந்த ஒற்றையானை கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த யானை மெதுவாக கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி பகுதி ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. அங்கு மண்திட்டு பகுதியில் ஏறும் போது உயர்மின்கம்பி யானையின் தலையில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அந்த ஒற்றை யானை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்களையும் வரவழைக்கப்பட்டது.