ஹிஜாப் சர்ச்சை குறித்து நடிகை எடுத்த அதிரடி முடிவு

#Actress
Prasuat month's ago

ஹிஜாப் அணிவதன் காரணம் குறித்து நடிகை சனா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் சனா கான். அயோக்யா, ஈ போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஹிந்தி, தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சனா கான் நடித்துள்ளார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய சனா கான், அந்த நிகழ்ச்சியில் 2வது இடைத்தை பிடித்தார். முஃபி அனஸ் சையத் என்பவரை திருமணம் செய்துகொண்ட சனா கான் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சா கான் ஹிஜாப் அணிவதற்கான காரணம் குறித்து பதிவுசெய்துள்ளார். அதில், எனது கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதியில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறை ஒன்றில் நான் இருந்தேன். அந்தக் கனவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதில், உங்கள் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில் நான் எழுந்தபோது எனக்கு பிறந்த நாள். பிறந்த நாளின் போது ஹிஜாப் அணியத் துவங்கினேன். இனி இதை ஒருபோதும் அகற்றமாட்டேன் என முடிவெடுத்தேன். இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன் குறிப்பிட்டுள்ளார்.