புது மாப்பிள்ளையுடன் ரகசிய ஒப்பந்தம் செய்த நடிகை ஹன்சிகாவின் அம்மா.

#Actress #Cinema
Maniat day's ago

ஹவா படத்தின் மூலம் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி

தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால், என முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா, தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது 50வது படமான மஹா சமீபத்தில் வெளியானது.

கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பரும் தொழில் அதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்தார். ஜெய்ப்பூரில் உள்ள பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்குச் சென்று செட்டிலாகிவிட்டார் ஹன்சிகா. அங்கு தான் நடிகை என்பதை மறந்து சாதாரண இல்லத்தரசியாக மாறி வீட்டு வேலை செய்தார்.

ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சியான லவ் ஷாதி டிராமா டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. ஹன்சிகாவும் அவரது தாயும் தங்களின் கடந்த கால பிரச்சனைகள், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முடிவுகள் என பல ரகசியங்களை பேசுகிறார்கள்.

ஹன்சிகாவின் லவ் ஷாதி நாடகத்தின் சமீபத்திய எபிசோடில், ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி மணமகன் சோஹைல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் ரூ. 5 லட்சம் கேட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி, சோஹைலின் தாயாரை அழைத்து அவர் தாமதமாக வந்ததாக புகார் தெரிவித்தார். அதாவது, இன்று தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்றார்.