தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்நாண்டஸ் குற்றவாளியாக பெயரிடப்பட்டார்

kaniat month's ago

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பில் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்நாண்டஸ் குற்றவாளியாக பெயரிடப்பட்டார்.

மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் (இந்தியன் நாணய பெறுமதிபடி) பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மனைவியிடம் பறித்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பொலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து செலவிட்டதும் தெரியவந்தது.

குறிப்பாக பொலிவுட் நடிகை இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபா பெறுமதியுள்ள பரிசு பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஜாக்குலின் பெர்நாண்டசின் பெயர் அமலாக்க அதிகரிகளால் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.