நடிகை ரோஜா செய்த புதிய சாதனை

#Tamil-Cinema #Cinema
Kobiat month's ago

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா.

இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் நடிகை ரோஜா புகைப்படம் எடுத்து கின்னஸ் சாதனை செய்திருக்கும் தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

அதாவது, ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ கிராபர்கள் போட்டோ கிளிக் செய்து இருக்கிறார்கள்.

புகைப்பட கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் ரோஜா மேடையில் ஏறி நிற்க அவரை சுற்றி இருந்த போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ கிளிக் செய்தனர்.

தெலுங்கு பேசும் போட்டோகிராபர்கள் ஒற்றுமையை காட்டுவதற்காகத்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

மேலும், போட்டோகிராபர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.