சுவிஸ் நாட்டில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் வீராங்கனை அர்ச்சனா ஆனந்தன் அப்புத்துரை

#Switzerland
Prasuat month's ago

வேலணை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வீராங்கனை அர்ச்சனா ஆனந்தன்!வாழ்த்துவோம்!!பாராட்டுவோம்!!

சுவிஸ் நாட்டில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் வீராங்கனை அர்ச்சனா ஆனந்தன் அப்புத்துரை அவர்கள்!!!!

சுவிஸ் நாட்டின் Bern  மாநிலத் தமிழ்ப் பாடசாலைகளை உள்ளடக்கிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 19.06.2022 அன்று  தமிழ்க் கல்விச் சேவையினால் வெகு சிறப்பாகத் தலைநகர் பேர்ண் வங்டோர் (Bern - Wandorf) மைதானத்தில் நடைபெற்றது. 

வீராங்கனை அர்ச்சனா ஆனந்தன் அவர்கள் கடந்த 7 வருடங்களாகத் தான் படிக்கும் Köniz தமிழ்ப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் வருடம்தோறும் குண்டெறிதல், 100 மீட்டர் ஓட்டப்போட்டி, நீளம்பாய்தல் போன்ற விளையாட்டுக்களில் முதலிடம் பெற்றுச் ஷம்பியன் இடத்தைப் பெற்றிருந்தவர். 

இம்முறையும் நீளம்பாய்தல், குண்டு எறிதல், 100 மீட்டர் ஒட்டம் போன்ற போட்டிகளில் பங்குபற்றி அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பெற்று 7 வது வருடமும் ஷிம்பியனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பது பெருமைக்குரிய விடயம்!

இம்முறை நடைபெற்ற 19வயதுப் பிரிவினருக்கான  அதே விளையாட்டுக்களில் பங்குபற்றி  ஷம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு 4 வெற்றிக் கிண்ணங்களைத் தனதாக்கிக் கொண்டவர் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

வேலணை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வீராங்கனை அர்ச்சனா ஆனந்தன் அவர்களை பாராட்டுவோம்......