மது போதையில் ஓடும் ரயிலை நிறுத்த சென்றவர் படுகாயம்

#Train #Accident #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 #Hospital
Pratheesat day's ago

ஓடிக் கொண்டிருந்த உடரட மனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ஒருவர் ரயிலில் சிக்கி படுகாயமடைந்தார்.

இன்று (18) பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்புவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அப்போது குறித்த ரயில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்தது.

காயமடைந்தவர் திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தகராறு ஏற்பட்டதையடுத்து குடிபோதையில் இருந்த நபர் புகையிரத பாதைக்கு வந்து ரயிலை நிறுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய நபர் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் குறித்த நபர் அதே ரயிலில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.