போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உக்ரைன் சென்ற போரிஸ் ஜான்சன்

#Russia #Ukraine #War #world news #Tamilnews #Lanka4
Prasuat day's ago

ரஷியா நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தார். 

அப்போது, போரின் பாதிப்புகள் குறித்து செலன்ஸ்கியிடம் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் உக்ரைன் வருகைக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோதும், பதவிக்காலம் முடிந்தபிறகும் உக்ரைனுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் பற்றிய குழு விவாதத்தில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.