உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்க முடியுமா - தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம்

#Sri Lanka
Prabhaat day's ago

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்க முடியுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த நிதி கிடைக்குமா என்பது குறித்து திறைசேரியின் செயலாளர் விரிவான பதிலை வழங்குவார் என, தாம், எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு திறைசேரியிடம் நிதி இல்லை என்று, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஒருபோதும் கூறவில்லை என, கோப் குழுவின் தலைவரான ஹர்ச டி சில்வா ட்விட் செய்துள்ளார்.

நிதியைக் தேடுவது மிகவும் கடினம். எனினும் தேவைப்பட்டால் பணத்தைக் திரட்ட முடியும் என்று, திறைசேரியின் செயலாளர் கூறியுள்ளதாக ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகடனத்தின்படி மார்ச் 9 ஆம் திகதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.