பிரச்சனைகளை முறியடித்து , பொருளாதார நெருக்கடியிலிருந்து விலகும் கடக ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat day's ago

மேஷம்
அசுவினி : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். தடைபட்டிருந்த செயல் நிறைவேறும்.
பரணி : நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர். உங்கள் செல்வாக்கு வெளிவட்டாரத்தில் உயரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : பணவரவில் இருந்த தடை விலகும். பழைய கடனை விரைவில் அடைப்பீர்.
ரோகிணி : புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். எதிர்பாராத வருமானம் வந்து சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகளில் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
திருவாதிரை : அரசு வழியில் சில சங்கடம் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 : வருமானத்தில் தடை உண்டாகும். கூட்டுத் தொழிலில் குழப்பத்தை சந்திப்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : எதிர்வரும் பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம் : பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
ஆயில்யம் : பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவதால் முயற்சியில் நன்மை உண்டாகும்.

சிம்மம்
மகம் : உடல்நிலை சீராகும். வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.
பூரம் : பகைவர்கள் தொல்லை நீங்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
உத்திரம் 1 : தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.வேற்று நபர் ஒருவரால் எண்ணம் நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். நிதி நிலை கூடும்.
அஸ்தம் : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகி லாபம் அதிகரிக்கும். விழிப்புணர்வு தேவை.
சித்திரை 1, 2: பிறர் துணையுடன் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.

துலாம்
சித்திரை 3, 4 : நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். சில செயல் இன்று இழுபறியாகும்.
சுவாதி : அரசு வழியிலான முயற்சி தள்ளிப்போகும். கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
விசாகம் 1, 2, 3 : பணியிடத்தில் கூடுதல் கவனம் தேவை. அன்பளிப்பு பெறுவதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்
விசாகம் 4 : நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
அனுஷம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நன்மையான நாள்.
கேட்டை : எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தினர் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

தனுசு
மூலம் : வசிக்கும் இடத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற சூழல் உண்டாகும். அவசரப்பட வேண்டாம்.
பூராடம் : வருமானத்தில் ஏற்பட்ட தடை அகலும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.
உத்திராடம் 1 : கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். புதிய சொத்து வாங்குவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
திருவோணம் : உங்கள் அணுகுமுறையால் நன்மையை பெறுவீர். புதிய முயற்சி நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : நீண்ட நாட்கள் வராமல் இருந்த பணம் இன்று வரும். நெருக்கடி தீரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : நிதானமாகப் பேசி நன்மை அடைய வேண்டிய நாள். குழப்பம் அதிகரிக்கும்.
சதயம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறக் கூடிய அறிகுறிகள் தோன்றும். செலவுகள் கூடுதலாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : தொழிலில் எதிர்பார்த்த நன்மை தள்ளிப்போகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்.

மீனம்
பூரட்டாதி 4 : நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.
உத்திரட்டாதி : அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
ரேவதி : பணியாளர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அதிகாரி ஆதரவால் அனுகூலம் ஏற்படும்.