நண்பர்களின் முயற்சியுடன் வெற்றிபெறும் கடக ராசிக்காரர் , வேலை தளங்களில் சங்கடங்களை எதிர்கொள்ளும் மிதுன ராசிக்காரர்கள் - ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat day's ago

மேஷம்
அசுவினி : உங்கள் முயற்சி வெற்றியாகும்.பிறரால் முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.
பரணி : தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
ரோகிணி : குடும்பத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சி எளிதாக நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2 : செலவுகளில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : செயல்களில் விழிப்புணர்வு தேவை. சந்திராஷ்டமத்தால் சில சங்கடம் உண்டாகும்.
திருவாதிரை : எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். பேசும் வார்த்தைகளில் கவனம் அவசியம்.
புனர்பூசம் 1, 2, 3 : பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

கடகம்
புனர்பூசம் 4 : வியாபாரத்தில் விரும்பியதை அடைவீர்கள். ஒரு சிலருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பூசம் : நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாள் வழக்கு சாதகமாகும்.
ஆயில்யம் : எதிர்பாராத லாபம் வரும். நிதிநிலை உயரும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்.

சிம்மம்
மகம் : வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பகைவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
பூரம் : எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியான விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
உத்திரம் 1 : புதிய முயற்சி நிறைவேறும். உங்கள் செயல்களில் நன்மை உண்டாகும். நிதிநிலை உயரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக சேமிப்பை உண்டாக்குவீர்கள்.
அஸ்தம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.
சித்திரை 1, 2 : உறவினர்கள் ஆதரவுடன் குடும்பத்தில் நன்மை உண்டாகும். வருமானம் உயரும்.

துலாம்
சித்திரை 3, 4 : அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு ஒன்றில் பின்னடைவு உண்டாகும்.
சுவாதி : தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மவுனம் அவசியம்.
விசாகம் 1, 2, 3 : வழக்கமான செயல்களும் இன்று இழுபறியில் முடியும். பண வரவில் தடையுண்டாகும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
அனுஷம் : சொத்து வழியிலான சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவீர்கள்.
கேட்டை : சொத்து சேர்க்கையில் கவனம் செல்லும். உங்கள் செல்வாக்கு வெளிவட்டாரத்தில் உயரும்.

தனுசு
மூலம் : நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.
பூராடம் : குடும்பத்தில் உங்கள் செயலை மற்றவர் பாராட்டுவர். நினைத்ததை அடைவீர்.
உத்திராடம் 1 : எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொள்வீர்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : வேலை பளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். செயல்களில் கவனம் அவசியம்.
திருவோணம் : மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
அவிட்டம் 1, 2 : குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்படும் நாள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மை தரும். வழக்கமான செயல் இழுபறியில் முடியும் .
சதயம் : அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண முடியாது.
பூரட்டாதி 1, 2, 3 : எளிதில் நிறைவேறும் என்று நீங்கள் நினைத்த செயலுக்கு தடை தாமதம் ஏற்படும்.

மீனம்
பூரட்டாதி 4 : மற்றவர் விரும்பும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரட்டாதி : உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்தவை நடந்தேறும்.
ரேவதி : புதிய முயற்சி ஒன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.