வியாபாரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய மகர ராசிக்காரர்கள் , புதிய முயற்சியில் தோல்வியடையும் கும்ப ராசியினர் - ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat day's ago

மேஷம்: 
அசுவினி : தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர். நீங்கள் ஈடுபடும் முயற்சி வெற்றியாகும்.
பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். உங்கள் அணுகுமுறையால் நினைத்ததை அடைவீர்.
கார்த்திகை 1 : வரவேண்டிய பணம் இன்று வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி அகலும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4 : முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்ப்புகளால் உங்கள் செயல் ஒன்று தள்ளிப்போகும்.
ரோகிணி : சந்திராஷ்டமம் தொடர்வதால் விழிப்புணர்வு அவசியம். சட்ட ரீதியாக சங்கடம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2 : வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள்.
திருவாதிரை : உறவினர் ஆதரவால் நேற்றைய முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : நீங்கள் விரும்பியதை அடைவீர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.

கடகம்: புனர்பூசம் 4 : மறைமுக சூழ்ச்சிகளை முறியடித்து உங்கள் செயலை செய்து வெற்றி காண்பீர்.
பூசம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.வழக்கு ஒன்று சாதகமாகும்.
ஆயில்யம் : உங்கள் துணிச்சல் அதிகரிக்கும். நண்பர்களுக்காக மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.

சிம்மம்: 
மகம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலை பெரியோரின் ஆதரவுடன் பேசி தீர்ப்பீர்கள்.
பூரம்: உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்.
உத்திரம் 1: அலுவலகத்தில் உங்கள் செயல்களுக்கு பாராட்டு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4 : தாய்வழி உறவினர் ஆதரவால் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
அஸ்தம் : குல தெய்வத்தின் அருளால் குழந்தைக்கான நற்செய்தி தேடிவரும்.
சித்திரை 1, 2 : குரு பகவான் அருளால் நேற்றைய எண்ணம் ஒன்று இன்று நிறைவேறும்.

துலாம்: 
சித்திரை 3, 4 : பிறரால் சில சங்கடத்தை சந்திப்பீர். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
சுவாதி : மற்றவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரலாம்.
விசாகம் 1, 2, 3 : துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4 : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
அனுஷம் : பெரியோரின் ஆலோசனை நன்மையில் முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு: 
மூலம் : உங்கள் மனம் தனிமையை விரும்பும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் குளறுபடி உண்டாகும்.
பூராடம் : மற்றவர்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். நிதானம் தேவை.
உத்திராடம் 1 : உங்கள் எண்ணப்படி செயல்படுவீர்கள். நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4 : வரவை விட செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம்.
திருவோணம் : மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். விழிப்புணர்வு தேவை.

கும்பம்: 
அவிட்டம் 3, 4 : முயற்சி வெற்றியாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
சதயம் : புதிய முயற்சி இன்று வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்.
பூரட்டாதி 1, 2, 3 : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். சகோதரர் உங்கள் செயலுக்கு உதவி செய்வார்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4 : உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி : தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரேவதி : வியாபாரத்தில் இரண்டு நாட்களாக இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.