அதிக வேலை வாய்ப்புகளை பெரும் மகர ராசியினர் , பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் மீனா ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat day's ago

மேஷம்
அசுவினி : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர்.
கார்த்திகை 1 : நண்பர்களிடம் ரகசியங்களை சொல்ல வேண்டாம். அதனால் சங்கடம் தோன்றும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை உங்கள் விருப்பப்படி முடிவிற்கு வரும்.
ரோகிணி : குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும் நாள்.
மிருகசீரிடம் 1, 2: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்ப்புகள் விலகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த வருமானம் வரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.
திருவாதிரை : பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : முயற்சிகளில் இருந்து வந்த தடை விலகும். ராகுபகவான் அருளால் எண்ணம் நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்கள் செயல்களில் சில தடை ஏற்படும். சட்டத்திற்கு புறம்பான செயல் வேண்டாம்.
பூசம் : குருவருளால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஒரு செயலில் போராடி வெல்வீர்கள்.
ஆயில்யம் : வியாபாரத்தில் போட்டியை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும்.

சிம்மம்
மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரம் : விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிக்கும் நாள்.
உத்திரம் 1 : பிறரால் செய்ய முடியாத செயலை செய்து வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : வரன் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும் நாள்.
அஸ்தம் : எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
சித்திரை 1, 2 : வருமானத்தில் ஏற்பட்ட தடை அகலும். வியாபாரத்தை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும். நிதானம் தேவை.
சுவாதி : செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வரவுகள் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர்.
அனுஷம் : உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்.
கேட்டை : வாகன வகையில் செலவு உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள்.

தனுசு
மூலம் : எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதிநிலை உயரும்.
பூராடம் : வியாபாரத்தை விரிவு செய்வீர். உங்கள் முயற்சிக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி சரியாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு நண்பர்கள் வழியே தகவல் வரும்.
திருவோணம் : தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை உங்கள் கைக்கு வரும்.
அவிட்டம் 1, 2 : உங்கள் அணுகுமுறையால் எதிர்பார்த்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
சதயம் : செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : வரவேண்டிய பணம் இன்று வரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : புதிய முயற்சி வேண்டாம். செயல் தாமதமாவதால் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
உத்திரட்டாதி : பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளில் கவனம் தேவை.
ரேவதி : பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். உங்களது கவனக்குறைவு சங்கடத்தை உண்டாகும்.