உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம் : எச்சரிக்கை விடுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்

இலங்கையில் வைத்தியசாலைகளில் சில மருந்துபி பொருட்களுக்கு பர்ராகுறை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழங்காவிட்டால் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..