மற்றுமொரு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
.jpg)
தேர்தல் ஆணைக்குழுவின்; மற்றொரு உறுப்பினருக்கு நேற்று இரவு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.முகமது தனது பதவியில் இருந்து விலகவேண்டும் என்று கோரி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.பி. திவரத்னவுக்கு மேலும் ஒருமுறை நேற்று கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இதில் முகமதுவுக்கு தொலைபேசி ஊடாகவும், திவாரட்னவுக்கு வட்ஸ்எப் மூலமாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் அந்த இரு உறுப்பினர்களின் வீடுகளுக்கும் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக உறுப்பினர்களான எஸ்.பி திவாரட்ன மற்றும் கே.பி.பி பத்திரன ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டு;ள்ளது.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..