பாகிஸ்தானின் பெஷாவூர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

#Pakistan #Bomb_Blast #Lanka4 #world news
Prabhaat month ago

நேற்று பகல் பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்ற நிலையில், ஏராளமான மக்கள் கலந்து கொண்ட போது  குண்டு வெடித்தது.

இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதேசமயம் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என பொலிஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு பள்ளிவாசலில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.