யாழ் மண்ணில் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு !

Amuthuat month's ago

யாழ் மாவட்டம் அளவெட்டி பிரதேசத்தை அண்டிய கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 50 குடும்பங்களுக்கு 2000 ரூபா  உலருணவுப்பொருட்கள்  மேல்மருவத்தூர் ஆருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையத்தின் ஏற்பாட்டில்
12.06.2022 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சக்தி திரு திருமதி தியானந்தன் அவர்களின் நிதியனுசரணையில் சிறப்பாக வழங்கிவைக்கப்பட்டது . 

யாழ்மாவட்டம் அளவெட்டி பிரதேச எமது அறப்பணிப்பொறுப்பாளர் சக்தி திரு.தவசுதன் குருக்கள்ஐயா அவர்களுடனான சக அறப்பணியாளர்கள் இந்தப் பணியை மிகசிறப்பாக செயற்படுத்தி வைத்துள்ளனர் .

அவர்களுக்கு மிகுந்தபாராட்டைத் தெரிவிக்கும் அதேவேளை எமது ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின்  எமது வலதுகரமாக செயலாற்றும் அவுஸ்ரேலிய மண்ணில் குயின்ஸ்லான்ட்டில்இருந்து செயற்படும் சக்தி .திருமதி .தனுஜா தியானந்தன் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் . 
அம்மாவின் பேரருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும் . 

“அறம்வழி நிற்பதே மறம் “
 
அன்புடன் :
சக்தி சுவிஸ் சுரேஷ் (நிறுவனர் )
ஆதிபராசக்தி அறப்பணி மையம்
Switzerland 🇨🇭