41 வயது நடிகையை கரம் பிடிக்கும் டெவில் வினய்

#Cinema #Tamil-Cinema #Actor #Actress #Lanka4
kaniat day's ago

சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழில் ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் வினய் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவர் கதாநாயகனாக நடித்த போது கிடைக்காத பேரும் புகழும், வில்லனாக நடித்த போது கிடைத்தது மட்டுமின்றி பல வெற்றிகளை பெற்றுள்ளார்.

43 வயதான முரட்டு வில்லன் வினய்யும் பிரபல நடிகையும் சில வருடங்களாகவே லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் ஊர் சுற்றி வந்தனர். தமிழில் பொய், இராமன் தேடிய சீதை, இருட்டு என சில படங்களில்நடித்தது மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு மட்டுமே அதிக படங்கள் நடித்த நடிகை விமலா ராமனுக்கு தற்போது வயது 41 ஆகிறது.

இந்நிலையில் வினய்  மற்றும் விமலா ராமன் இருவரும் லிவிங் டுகெதரில் சில வருடங்கள் இருந்து வந்தனர். தற்பொழுது இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. இருவருக்கும் வயது அதிகம் என்பதால் கண்டிப்பாக இந்த திருமணம் நடக்கும்.

இந்த காதல் பறவைகள் சில வருடங்களாகவே மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடுமுறைகளை கழித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் வினய் கோட் சூட் போட்டுக் கொண்டு மாப்பிள்ளை ஆக கெத்தாக தன்னுடைய வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

ஒருவேளை இந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும்போது வினய்  மற்றும் விமலா ராமன் இருவரும் சைலன்டாக திருமணத்தை முடித்துவிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார்களோ! என்றும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்புவது மட்டுமின்றி, அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.