நடிகர் சிம்புவுடன் இணையும் இயக்குனர் முருகதாஸ்

#Tamil-Cinema
Prasuat month's ago

முருகதாஸ் தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனராக இருந்தவர். துப்பாக்கி, கத்தி என பல பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்த அவர் கடைசியாக தர்பார் படம் இயக்கினார். அதற்கு பிறகு அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை.

அந்த படம் வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. விஜய் உடன் மீண்டும் அவர் கூட்டணி சேர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென விஜய் அவரை கழட்டி விட்டு நெல்சன் இயக்கத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த படம் பிளாப் ஆனது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

2 வருடமாக படம் அறிவிக்காமல் இருக்கும் முருகதாஸ் எப்போது மீண்டும் படம் இயக்குனர் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் டாப் ஹீரோக்களை நம்பி பயனில்லை என அடுத்த லெவலில் இருக்கும் நடிகர்கள் பக்கம் திரும்பி இருக்கிறார் முருகதாஸ். அவர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தற்போது தகவல் வந்திருக்கிறது.