உங்கள் உடலில் மச்சம் உள்ளதா - அதன் அர்த்தம் என்ன தெரியுமா...?

#Lifestyle #Lanka4 #லங்கா4
Nilaat month ago

நம் உடம்பில் ஆங்காங்கே சில இடங்களில் மச்சம் இருப்பது உங்களுக்கே தெரியும்.

அவ்வாறு அமைந்துள்ள மச்சம் சில வேறுபட்ட நிறங்களில் அளவுகளில் பகுதிகளில் அமைந்திருக்கும்.

நம் உடலிலுள்ள மச்சங்களும் அது சொல்லும் அர்த்தங்களையும் இங்கே விரிவாக பார்க்கலாம்..

அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும். 

கறுப்பு நிறம் சற்று மங்கலாக இருந்தால், வருமானம் நிரந்தரமாக இருக்காது.

 சிலருக்கு குங்கும வண்ணத்தில் மச்சம் இருக்கும். இவர்கள் உல்லாசப் பிரியர்கள். தந்திரமான நுண்ணறிவுடன் திகழ்வர். 

மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள்; நிரந்தர வருமானம் உண்டு.

 பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும். 

இளஞ்சிவப்பு நிறத்தில் மச்சம் இருந்தால், மகான்களாகவும் விஞ்ஞானிகளாகவும் புகழ்பெறுவார்கள்.

 அபூர்வமாகச் சிலருக்கு மஞ்சள் கலந்த மச்சம் இருக்கும். அந்த அன்பர்கள், மிகவும் கலகலப்பான இயல்பு கொண்டவர்களாக, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவார்கள்.

 நெற்றியில் மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்துக்கான அம்சம். விருப்பம்போல் வாழ்க்கை அமையும். கணவனின்/மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

 வலது கண் புருவத்தில் மச்சம் அமைந்திருப்பின் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் கொடுக்கும். இவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது விதிமுறை. 

இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள். பிறருக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள்.

 முகவாயில் மச்சம் இருபது நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். குடும்பவாழ்வு திருப்திகரமாக இருக்கும். எனினும் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும்.

 கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் அகன்ற முகமும், திரண்ட உருவ அமைப்பும், திடகாத்திரமும், நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். யாருக்கும் அஞ்சாதவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.

 மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் துன்பங்களை அனுபவித்து, பிற்கால வாழ்வில் நல்ல சுகத்தை அடைவர். மனத்தில் எதையும் ஒளித்துவைக்க மாட்டார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். அதேநேரம் வாழ்வில் எவ்வித கஷ்டம் வந்தாலும், அதைப் பிறர் அறியாவண்ணம் சகித்துக் கொள்வார்கள். சிற்பம், மரவேலை போன்ற ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்குவார்கள்.

 கைவிரல்களில் அமையும் மச்சங்களுக்கு ஏறத்தாழ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான பலன்கள்தான். 

கட்டைவிரலில் மச்சம் இருந்தால், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர். 

ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால், ஆட்சி அதிகாரம் செய்யக் கூடிய அம்சம் பெற்றவர்.

நடுவிரலில் மச்சம் இருப்பின், கலை உள்ளம் படைத்தவர்களாக இருப்பர்.

 மோதிர விரலில் மச்சம் அமைந்திருப்பின், அழகான தோற்றமும் அளவான உடல் அமைப்பும் அமைந்திருப்பது இயற்கை. எதையும் கூர்மையாக விளங்கிக்கொள்ளும் இயல்பு உண்டு.

 சுண்டு விரலில் மச்சம் இருந்தால், சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள். கல்வித் துறையில் முன்னேற்றம் உண்டு. எதிலும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது இவர்களின் குணம்.

இப்போது உங்கள் உடம்பிலுள்ள மச்சங்களை பார்த்து அதன் அர்த்தங்களையும் அறிந்திருப்பீர்கள், நீங்கள் எப்படி.... மச்சம் கூறும் அர்த்தங்கள் சரிதானே...!