விநாயகருக்கு நெற்குத்தி விநாயகர் என பெயரிட்டதன் காரணம் தெரியுமா? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#ஏகதந்தன் #கணபதி #ஐங்கரன் #விநாயகர் #பிள்ளையார் #spiritual #God #Pillaiyar #today #information
Kesariat month's ago
  • விழுப்புரம் மாவட்டத்தில்  நெற்குத்தி விநாயகர் உள்ளார். நெல்லை குத்த கல் தேடிய போது விநாயகர் உருவில் ஒரு கல் கிடைக்கப்பெற்று பின்னர் அது பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வந்தனர்.
     
  • மேலும் இந்த கோவில் விநாயகரை பொய்யாமொழி விநாயகர் என்றும் அழைப்பர். இங்கு ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவை மும்முர்த்திகளாக போற்றப்பட்டு வணங்கப்பெற்று வருகிறது.
     
  • ஈச்சனாரி விநாயகர் கோயம்புத்துாரில் இருக்கார். பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்ய இவ்விநாயகரை எடுத்துச்சென்ற போது வண்டியின் அச்சாணி ஒடிந்து வழியிலே அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இப்பெயர் பெற்றார்.
     
  • கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார்.
     
  • பதினாறு பேறும் தருபவர் என்பதால் செல்வ கணபதி என்ற இப்பெயர் வந்ததாகச் சொல்கின்றனர். இவரை கோவை பாலக்காடு மரப்பாலம் எனும் இடத்தில் தர்மலிங்கேசர் மலையடிவாரத்தில் காணலாம்.