ஈரானில் ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்!

#world news #Attack #Iran #Israel
Amuthuat month ago

ஈரானின் மத்திய பிராந்தியத்தில் உள்ள இஸ்பஹான் நகரில் அமைந்துள்ள ராணுவ முகாம்  மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஈரானின் ராணுவ முகாம்  ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த குண்டுவெடிப்பினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஈரான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தனது வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதலுக்கு வந்த மேலும் இரண்டு ட்ரோன்களை அழித்ததாகக் கூறியது. தாக்குதலின் பின்னணியில் உள்ள தரப்பினர் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.