ஒரே இடத்தில் படப்பிடிப்பு ரஜினி - அஜித் சந்திப்பு நடைபெற வாய்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

Nilaat day's ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதே ஸ்டூடியோவில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு ஸ்டுடியோவில் அடுத்தடுத்த செட்களில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அஜித் மற்றும் ரஜினி ஆகிய இருவருமே இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளதால் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி மற்றும் அஜித் சந்திப்பு நடக்குமா? அப்படி நடந்தால் அந்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு ரஜினியை அஜித் சந்தித்ததாக புகைப்படம் ஒன்று வெளியானது என்பதும் அதன் பிறகு அஜீத்தின் மேனேஜர் இது குறித்து விளக்கம் அளித்தபோது, அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் ரஜினி - அஜித் சந்திப்பு நடைபெறவில்லை என்றும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பதும் தெரிந்ததே.