இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முன்னனால் ஜனாதிபதி

#Sri Lanka #Sri Lanka President #Lanka4 #sri lanka tamil news
Prabhaat month's ago

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார்.

இதுவே பதவி நீக்கப்பட்ட பின்னர் அவர், பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நிகழ்வாகும்.

குறித்த நிகழ்வில் அவரது சகோதரரும், முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பல இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச சில விருந்தினர்களுடன் பேசுவதையும் புகைப்படங்களுக்கு தோன்றியதையும் காண முடிந்தது.

கடந்த ஆண்டு பொதுமக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து பதவியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பெரும்பாலும் பொது நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது .