தேசிய கொடியேற்றி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்!

#India #Lanka4 #M. K. Stalin
Prabhaat month's ago

74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை வீதியில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை காமராஜர் வீதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் ஆர்.ரன்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, முப்படை அதிகாரிகள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர பொலிஸ் ஆணையர் உள்ளிட்டோர் வரவற்றனர்.

இதைதொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.