இன்று மட்டக்களப்பு உணவகங்களில் அதிரடி சோதனை நடத்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் (புகைப்படங்கள் இணைப்பு)

Prasuat month ago

கல்லடி தொடக்கம் பிள்ளையாரடி வரை இன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 64 ஹோட்டல்கள் , சிறிய உணவகங்கள், பாடசாலை காண்டின்கள், வைத்தியசாலை உணவகம், பேக்கரிகள் என முடிந்தவையெல்லாவற்றையும அதிரடியாக நானும்  6 MOH களும்SPHI-D, SPHIs, F&DI 60 PHIs களும் இணைந்து பரிசோதித்தோம்.

1. இதன்போது பல இலட்சக்கணக்கான பாவிக்கமுடியாத உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டன ( வீணி வடிந்த கோழி இறைச்சி மட்டும் 35 kg ஒரே கடையில்)
2. 14 ஹோட்டல்களும் கண்டீன்களும் மூடி சீல் வைக்கப்பட்டது 
3. 10 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இன்றே அபராதம் பெறப்பட்டு இறுக்கமான உத்தரவுகளும் வழங்கப்பட்டது.

நீங்கள் திறமான கோட்டல்கள் என்று எண்ணும் பல அடிப்படை சுகாதாரமற்று அம்மணமாக உள்ளே காட்சியளித்தது.

விரைவில் மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து ஹோட்டல்களின் தரம் காட்சிப்படுத்தப்படும்போது நீங்கள் ‘A’ தரம் பெற்ற ஹோட்டல்களை நாடமுடியும். 

அதுவரை நாளை திறந்திருக்கின்ற ஹோட்டல்கள் திருப்தியானது.,எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
Dr.Sukunan Gunasingam
RDHS, Batticaloa