மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும்

#Electricity Bill #Lanka4
Prabhaat month's ago

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ளவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.