உங்களுக்கு இம்முறை ஏழரைச்சனியென்றால் இப்பரிகாரங்களை சனிபகவானுக்குச் செய்யுங்கள்.

#ஆன்மீகம் #கடவுள் #சனிபகவான் #spiritual #God #Saturn
Kesariat month's ago

சைவ சமயத்தின் படி சனீஸ்வரர் ஒரு நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் நமது ராசிகளுக்கு ஏற்றாற் போல்  சில ராசிக்காரர்களுக்கு சில நேரங்களில் துன்பம் தருவார். 

இப்படி சனி பகவானின் பார்வையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எவ்வளவோ பரிகாரங்கள் இருந்த போதிலும் நாம் சனி பகவானை சாந்தப்படுத்தி அவரின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்

 • காலபைரவருக்கு சனிக்கிழமை நாட்களில் சைவர்கள் ஒரு வெள்ளை புது துணியில் மிளகாய் முடிச்சு போட்டு. அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றிய தீபம் ஏற்றலாம்.
   
 • ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தினங்களில் சைவர்கள் நெய் தீபம் ஏற்றி சனி பகவானை மனதில் நினைத்து மனதார வேண்டி கொண்டால் சனி பகவானின் தாக்கம் குறையும்.
   
 • பெருமாளுக்கு சனிக்கிழமை அன்று விரதம் இருந்து மனதார வேண்டிக் கொண்டால் சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
   
 • சனி பகவானே திருப்தி படுத்துவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வரலாம். குறிப்பாக பார்வையில்லாதவர்கள், நடக்க இயலாதவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாம் மற்றும் காலில்லாதவர்களுக்கு உன்று கோல் தானமாக மற்றும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கும். இதனால் சனி பகவான் சாந்தப்படுவார்.
   
 • உங்களை பிடித்த ஏழரை சனி முடியும் வரை சனிக்கிழமை தினம் அன்று இரவில் படுக்கும் போது சனிக்கு பிடித்த தானியமான எள்ளை ஒரு கைப்பிடி அளவு தானியமான உங்களின் தலைக்கு கீழ் வைத்து உறங்கி பின் காலை எழுந்தவுடன் புதியதாக வடித்த சாதத்துடன் அந்த எள்ளை கலந்து சனி பகவானின் வாகனமான காகத்திற்கு படைத்து வந்தால் சனி சாந்த படுவார்.