நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் துடுப்பெடுத்தாட இந்திய அணி தீர்மானம்

#Newzealand #India Cricket
Prasuat day's ago

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. 

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று 1.30 மணியளவில் தொடங்குகிறது. 

இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடவில்லை. முதுகுவலி காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். 

ஸ்ரேயாஸ் அய்யர் ஆடாததால் இஷான் கிஷனுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடக்க வீரராக ஆடிய இஷான் கிஷன் 5-வது வரிசையில் விளையாடுவார். 

ரோகித்சர்மா, சுப்மன்கில், வீராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பிறகு அவர் களம் இறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.