ஜனவரி மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது

#inflation #Sri Lanka #Lanka4
Pratheesat month ago

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த மாதத்தில் பணவீக்கம் 54.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு.

கொழும்பின் நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கடந்த டிசெம்பர் மாதத்தில் பணவீக்கம் 57.2 சதவீதமாக இருந்தது.

இந்த மாதத்தில் உணவு வகை பணவீக்கம் 60.1 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.