கூகுல் சேவையை பயன்படுத்தும் போது அதனால் சேகரிக்கப்படும் தகவல்கள்.

#கூகுல் #சேவை #பயன்பாடு #தகவல் #சேகரிப்பு #google #service #Collection #information #people
Kesariat month ago

நாம் அனைவரும் கூகுல் சேவையை பயன்படுத்தாமல் இல்லை. அதைப்பயன்படுத்தும் போது நாம் வழங்கும் தேடலினை வைத்து கூகுல் சில தகவல்களை திரட்டுகிறது.

உங்கள் பயன்பாடுகள், உலாவிகள் & சாதனங்கள்

 Google சேவைகளை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகள், உலாவிகள், சாதனங்கள் ஆகியவற்றைக் குறித்து தகவலைச் சேகரிக்கப்டும். இது தானியங்கு திட்டங்ப் புதுப்பிப்புகள், பேட்டரி குறைவாக இருக்கும் போது உங்கள் திரையை மங்கலாக்குவது போன்ற அம்சங்களை வழங்க உதவும்.

நாங்கள் சேகரிக்கும் தகவலில் தனித்துவமான அடையாளங்காட்டிகள், உலாவி வகை மற்றும் அமைப்புகள், சாதனத்தின் வகை மற்றும் அமைப்புகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் தகவல் மற்றும் பயன்பாட்டின் பதிப்பு எண் ஆகியவை அடங்குகின்றன.

IP முகவரி, சிதைவு அறிக்கைகள், சாதனத்தின் செயல்பாடு, உங்கள் கோரிக்கையின் தேதி, நேரம் மற்றும் ரெஃபரர் URL உள்ளிட்ட எங்கள் சேவைகளுடனான உங்கள் உபயோகம், உலாவிகள் மற்றும் சாதனங்களின் ஊடாடல் குறித்த தகவலும் சேகரிக்கப்படும்.

கூகுல் இந்தத் தகவலை, உங்கள் சாதனத்தில் உள்ள ஏதேனும் Google சேவையானது எங்கள் சேவையகங்களைத் தொடர்புகொள்ளும் போது சேகரிக்கிறது. . நீங்கள் Android சாதனத்தில் Google ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் சாதனம் அது பற்றிய தகவலையும், எங்கள் சேவைகளுடனான தொடர்பு குறித்த தகவலையும் வழங்குவதற்கு, அவ்வப்போது Google சேவையகங்களைத் தொடர்புகொள்ளும் போது இந்தத் தகவலில் உங்கள் சாதனத்தின் வகை, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயர், சிதைவு அறிக்கைகள், நீங்கள் எந்தெந்த ஆப்ஸை நிறுவியுள்ளீர்கள், மேலும் உங்கள் சாதன அமைப்புகளைப் பொறுத்து உங்கள் Android சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்த பிற தகவல்கள் போன்றவை அடங்கும்.

உங்கள் செயல்பாடு

நாங்கள் கூகுல் சேவைகளில்  மேற்கொள்ளும் செயல்பாடு குறித்த தகவலைச் சேகரிக்கிறது. நீங்கள் விரும்பக்கூடிய YouTube வீடியோவை உங்களுக்குப் பரிந்துரைப்பது போன்றவற்றைச் செய்ய இதைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் சேகரிக்கும் செயல்பாட்டுத் தகவலில் பின்வருபவை இருக்கக்கூடும்:

  • நீங்கள் தேடும் வார்த்தைகள்
  • நீங்கள் பார்க்கும் வீடியோக்கள்
  • விஷயம் மற்றும் விளம்பரங்களின் பார்வைகளும் அதனுடனான ஊடாடல்களும்
  • குரல் மற்றும் ஆடியோ தகவல்கள்
  • வாங்குதல் செயல்பாடு
  • நீங்கள் விஷயத்தைப் பகிரும் நபர்கள் அல்லது தொடர்புகொள்ளும் நபர்கள்
  • எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்புத் தளங்களிலும் பயன்பாடுகளிலும் மேற்கொள்ளும் செயல்பாடு
  • உங்கள் Google கணக்கில் ஒத்திசைத்த Chrome உலாவல் வரலாறு

நீங்கள், உங்கள் கணக்கில் சேமித்துள்ள செயல்பாட்டுத் தகவலைக் கண்டறியவும் நிர்வகிக்கவும், உங்கள் Google கணக்கிற்குச் சென்று பயன் அடையுங்கள்.