இலங்கை அதிகாரிகள் மீது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தண்டனை குறித்து மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு குற்றச்சாட்டு

#Human Rights #Human activities #world news #Tamilnews #Lanka4
Prasuat month ago

இலங்கை அதிகாரிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களையும் தரங்களையும் திட்டமிட்ட வகையில் மீறியதுடன், மக்கள் போராட்டம் மீதான அவர்களின் அடக்குமுறையில் தண்டனையை தவிர்த்து வருவதாகவும் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அமைதியான போராட்ட இயக்கத்தின் இடைவிடாத அடக்குமுறையை விபரிக்கும் வகையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சிங்களத்தில் அரகலய என்றும் தமிழில் போராட்டம் என்றும்  அழைக்கப்படும் எதிர்ப்பு இயக்கம், அரசாங்கத்தின் நீடித்த பொருளாதார தவறான நிர்வாகத்தாலும், ஊழல் மீதான பெருகிவரும் பொதுமக்களின் அதிருப்தியாலும் தூண்டப்பட்டது.

ஆரம்பத்தில் நாட்டின் தலைநகரான கொழும்பில் ஆரம்பித்த எதிர்ப்புக்கள், இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் விரைவாகப் பரவியது.2023 இலும் கொழும்பில் சில போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்தநிலையில்;, எதிர்ப்பு இயக்கம் மீண்டும் எழுவதைத் தடுக்க இராணுவ மற்றும் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அண்மைய எச்சரிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்று அமைப்பின் பொதுச்செயலாளர் அடிலுர் ரஹ்மான் கான் கோரியுள்ளார்.

சர்வதேச சமூகம் விழிப்புடன் இருப்பது அவசியமானது என்றும், எதிர்ப்பாளர்களின் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள்; உட்பட்டவர்களையும் இலங்கை  அதிகாரிகள் குறிவைத்தனர்.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.

அதேநேரம் அமைதியான கூட்டங்களை கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் உள்ளிட்ட தேவையற்ற  சக்தியை அதிகாரிகள் அடிக்கடி பயன்படுத்துவது, அமைதியான முறையில் கூடும் சுதந்திரத்திற்கான உரிமை மீறல்களின் மிகவும் குழப்பமான வடிவமாகும்.

அத்துடன், காவல்துறையினர், தன்னிச்சையாக  போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை கைது செய்து, அவர்களில் பலரை நீதித்துறை துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் கண்காணிப்பு உட்பட முறையான துன்புறுத்தல் பிரசாரத்திற்கு உட்படுத்தினர்.

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், கொடூரமான சட்டங்கள் உட்பட சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலமும் அதிகாரிகள கட்டுப்பர்டுகளை விதித்து வருகின்றனர்; என்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதியான நாளை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள இலங்கையின் நான்காவது உலகளாவிய கால மீளாய்வு அமர்வுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.