வெடிபொருட்களுடன் கைப்பற்றப்பட்ட பாரவூர்தி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

#Arrest #Police #Sri Lanka #Sri Lankan Army #Lanka4
kaniat day's ago

பிங்கிரிய பிரதேசத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடனா பாரவூர்தி தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு விலத்தவ பகுதியில் வீதித்தடை கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பாரவூர்தி ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய 89 குழாய்கள், 80 அடி நீளமுள்ள 21 நூல், தலா 100 டெட்டனேட்டர்கள் கொண்ட பெட்டிகள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

33 மற்றும் 44 வயதுடைய குறித்த இருவரும் மன்னாரை வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.

மீன்பிடித் தேவைக்காக குருணாகல் பகுதியில் இருந்து இந்த வெடிபொருட்களை தாம் கொண்டு வந்ததாகவும், பாரவூர்தி மூலம் அவற்றை கொழும்பு பகுதிக்கு கொண்டு செல்வதாகவும் சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.