நடிகர் மம்முட்டி திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வரவுள்ளதாக தகவல்

kaniat month ago

இந்திய திரைப்பட முன்னணி நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி 35 வருடங்களுக்குமேல் தமிழ் மலையாளம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த பிரபலமான ஒருவராவார்.

கண்டியிலுள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் படமாக்கப்படவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சுற்றுலாத் தூதுவர் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய ஆகியோரும் அவரைச் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.