மௌனப் போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கெசல்வத்தை பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிவான்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தற்போது சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலியை விளக்கமறியலில் வைக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்யுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தக் கோரிக்கை தொடர்பான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (31) அறிவிக்கவுள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத்திற்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் மௌனப் போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கெசல்வத்தை பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..