ராகுல் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு தேவை அமித்ஷாவுக்கு கார்க்கே கடிதம்

Maniat month ago
m

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மல்லிகார்ஜூனா கார்கே அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய தனது இந்திய ஒற்றுமையாத்திரை ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்கிறார் வரும் ஜனவரி 30 ஆம் தேதி பல்வேறு தலைவர்களின் முன்னிலையில் நடைபயணத்தில் நிறைவு செய்ய உள்ளார், நடைப்பயணத்தின் நிறைவு விழாவை நடத்த உள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று ஜம்மு காஷ்மீரில் பனிஹால் பகுதியில் தனது யாத்திரையை மேற்கொண்டார்,தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லாவும் இதில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக யாத்திரை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரத்து செய்வதாக அறிவித்தனர் பின்பு பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் விளக்கம் தந்தனர்.

தொடர்ந்து இன்று ராகுலின் நடைபயணம் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மல்லிகார்ஜுனா கார்கே அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.