மல்லுக்கட்டிய கமல்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளம்

#Kamal #Cinema #Tamil-Cinema #Tamil #Tamilnews #Lanka4
kaniat month's ago

கமல் இப்பொழுது பெரிய முன்னணி நடிகராக இருந்து வந்தாலும் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார். பின்பு அவர் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட அவருக்கு பெரிய ஹீரோவாக ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்து வந்தது.

மேலும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அரங்கேற்றம். இத்திரைப்படத்தில் சிவக்குமார்,பிரமிளா,எம் என் ராஜம்,மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இதில் எப்படியாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் கேட்டு இதில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் இந்த படத்தில் கமலுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே. இந்த சம்பளத்தை பெற்ற கமல் கோபத்தின் உச்ச நிலைக்கு சென்றார். பின்பு குறைந்த சம்பளத்தை மட்டுமே வாங்கின கமல் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திலும் மற்றும் கே பாலச்சந்திரிடமும் சென்று மல்லுக்கட்டி சண்டை போட்டிருக்கிறார். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பெரிய ரணகளமே ஏற்பட்டது.

பின்பு கே. பாலச்சந்தர் அவரிடம் சென்று சமாதானம் செய்தார். இந்தப் படத்தின் மூலம் இன்னும் நீ அதிகமான படங்களில் நடித்து பெரிய ஹீரோவாக வர வேண்டும். அப்பொழுது இந்த சம்பளத்தை விட பன்மடங்கு சம்பளம் வாங்குவாய் என்று அவரை தேற்றி இருக்கிறார்.

மேலும் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்தார். இயக்குனர் கே.பாலச்சந்திரன் சொன்ன மாதிரியே பல படங்களில் நடித்து அதற்கான சம்பளத்தையும் அதிகமாகி பெற்று பெரிய சந்தோசத்தை அடைந்தார். இதனால் கமல் சினிமா துறையில் இவரின் குருவாக கே. பாலச்சந்திரன் நினைத்து இப்பொழுது வரை பெருமிதமாக பேசிக் கொண்டு வருகிறார்.

கமலஹாசன் தன் குரு சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அவரின் முழு முயற்சியும் நடிப்பில் செலுத்தி ஒரு பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் இப்பொழுது வரை இவரின் உழைப்பிற்கும் மற்றும் விடாமுயற்சிக்கும் பெரிய பாராட்டுகளுடன் எதிர்பாராத அளவுக்கு சம்பளத்தையும் பெற்று வருகிறார்.