மனிதன் ஓர் இரட்டை பிறவி.. இருட்டு பிரபஞ்சத்தின் திறவுகோல்

#meditation
Pratheesat year ago

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

பொதுவாக மனிதனோடு ஒட்டி பிறந்த இரட்டை பிறவி உண்டு அது அவனது மூளைதான்..

ஆம் நீங்கள் இருவரும் பிண்ணிப்பிணைந்த இரட்டை பிறவிகள் இந்த பிணைப்பை மூளைதான் உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது..

காரணம் மூளை உங்களை கட்டுப்படுத்துவதை நீங்கள் ஒரு போதும் அறிந்து விடக்கூடாது என்பதற்காக.. 

அதெப்படி நான் என்பதும் எமது மூளையின்  வெளிப்பாடுதானே அப்படியானால் நான்தானே அனைத்தையும் தீர்மானிக்கிறேன் என்று நீங்கள் எண்ணலாம் அப்படி எண்ணத்தான் உங்கள் மூளை தூண்டும்.. ஆனால் உண்மை அதுவல்ல.. 

சரி சற்று விரிவாக பார்ப்போமா?

உங்கள் மூளை இரண்டாக பிரிப்போம்..

1.ப்ரைமரி ப்ரைன் (PRIMARY MIND)

2.சப்கான்சியஸ் ப்ரைன் (SUBCONSCIOUS MIND)

ப்ரைமரி_ப்ரைன்..

உதாரணமாக நீங்கள் உங்கள் தாயின்  கருவறை இருட்டில் கண் திறந்தது முதல் இன்று வரை அனைத்தையும் உங்கள் மூளை பதிவேற்றி வைத்திருக்கும்..

ஆனால் அதை நினைவுகூறவோ அதைப்பற்றி தெரிந்து கொள்ளவோ நீங்கள் முயல எண்ணும் போது உங்கள் மூளையின் நினைவுகள் அதை நோக்கி போகாது. காரணம் ப்ரைமரி பிரைன் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மட்டுமே சிந்தனையை உங்களுக்கு கொடுக்கும்  இந்த ப்ரைமரி ப்ரைன் எப்போதும் ஏதோ ஓர் அலைவரிசையில் பயணித்து கொண்டே இருக்கும். சூழலைப் பொறுத்து மட்டுமே முடிவுகளை எடுக்கும் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே காட்டும் நினைவுபடுத்தும்.

எல்லாத்தையும் பதிவு செய்து வைத்திருக்கும் மூளை ஏன் மனிதர்கள் நினைக்கும் நேரத்தின் பதிவை எடுத்து காட்டுவதில்லை ? அப்படியான் இதை யார்தான் கட்டுப்படுத்துகிறார்கள்? இந்த அலைவரிசை இறந்த காலத்தை மட்டும் அசைபோடுவதில்லை எதிர்காலத்தையும் அசை போடும் உங்களுக்கான எதிர்காலம் எப்படி வேண்டும் என இது பல அலைவரிசையில் பரிணமிக்கும். எண்ணிலடங்கா அலைவரிசையை ஏற்படுத்தி உங்களால் பயணப்பட்டுக்கொண்டே இருக்க முடியும்..

இந்த ப்ரைமிரி ப்ரைன் தான் நீங்கள்.

சப்கான்சியஸ்_ப்ரைன் (ச.ப்).

இருப்பதிலே மிகவும் சக்தி வாய்ந்தது இதுதான்.. இதுதான் ப்ரைமரி ப்ரைனை கட்டுப்படுத்தி வைத்திருப்பது. இதை ஒரு போதும் உங்களால் உணர முடியாது காரணம் ச.ப் அப்படியான கட்டமைப்பை உங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறது..

இது பெரும்பாலும் எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் உங்களது அனைத்து பதிவுகளும் இதில் இருக்கும் அது எந்த (இறந்த,நிகழ்,எதிர்) காலம் ஆனாலும் அனைத்தையும் உருவாக்குவது இதுதான். அதில் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே இது பிம்பப்படுத்தும். அது எடுப்பதுதான் உங்கள் தலைவிதி அனைத்தும்.. உங்களுக்கு பேயை காட்ட வேண்டுமா கடவுளை காட்ட வேண்டுமா..? இல்லை அணுவை காட்டவேண்டுமா அவற்றால் இணைந்த ஒரு பொருளை காட்ட வேண்டுமா .? இப்படி எல்லாவற்றையும் முடிவெடுப்பது அதுதான்.

ஆனால் மேலே கூறியவை அனைத்தையும் உயிர்ப்பிப்பது உங்களது சப்கான்சியஸ் ப்ரைன் தான் மன்னிக்கவும் உங்களது அல்ல காரணம் இதுநாள் வரை அதற்கு தான் நீங்கள் அடிபணிந்து உள்ளீர்கள்.. அதுதான் உங்களை கட்டுப்படுத்துகிறது.

என்று மனிதன் ச.ப் கட்டுப்படுத்த முயன்று அதில் வெற்றி காணுவனோ அன்று அவன் இந்த பிரபஞ்சத்தின் அதிபதி ஆகிறான்.

இதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளதா..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இருக்கிறது..

எதிரி தந்தது சுதந்திரம் அது மனிதனுக்கல்ல அவனது மூளைக்கு (ச.ப்) இதனாலேயே அவன் பெரும்பாலும் அத்தகைய அலைவரிசைகளை பயன்படுத்தி இன்றளவும் மனித இனத்தை அடிமைப்படுத்தி வருகிறான்.

ஆதியில் மனிதனுக்கு அடிபணிந்த மூளை(ச.ப்), இன்று அதற்கு அடிபணிந்து மனிதன் வாழ்கிறான்.