கப்பல் பகிர்வு கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டு வரும் எம்.எஸ்.சி என்ற மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி மற்றும் ஏ.பி மோல்லர்-மார்ஸ்க்

Prabhaat month's ago

உலகின் முதல்தர கப்பல் நிறுவனங்களான எம்.எஸ்.சி என்ற மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி மற்றும் ஏ.பி மோல்லர்-மார்ஸ்க் ஆகியவை 2025 ஜனவரியில் இல் தங்கள் கப்பல் பகிர்வு கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளன.


'2எம் கூட்டணி' என்று பிரபலமாக அறியப்படும் இந்த கூட்டு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில், கப்பல்களின் பெருக்கத்தையும், பலவீனமான தேவையையும் சமாளிக்கவும், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கும், மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய கப்பல் வழித்தடங்களில் போட்டி மற்றும் செலவு குறைந்த செயல்பாடுகளை உறுதி செய்வதற்கும் 2015 இல் உருவானது.


உலகளாவிய கடல் சரக்கு தொழில், குறைந்த கட்டணங்கள் மற்றும் அதிக திறன் ஆகியவற்றுடன் போராடும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.\


இந்தநிலையில் தமது கூட்டணியை ரத்துச்செய்வதனால், இரண்டு நிறுவனங்களும் தங்கள் தனிப்பட்ட உத்திகளைத் தொடர வழி வகுக்கும் என்று இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று, தங்களிடம் மிகவும் வித்தியாசமான உத்தி உள்ளது.


நிலம் சார்ந்த தளவாட வணிகத்துடன் கடலில் கொள்கலன் கப்பல் போக்குவரத்தை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துவதாக மார்ஸ்கின் கப்பல் நிறுவனத் தலைவர் ஜோஹன் சிக்ஸ்கார்ட் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

'எங்கள் சொந்த நெட்வொர்க்கை இயக்குவது எங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது மற்றும் நாங்கள் விரும்பும் இடத்தில் எங்கள் கப்பல்களை இணைக்க அனுமதிக்கிறது,' என்று அவர் மேலும் கூறினார்.

ஆளுஊ ஒரு அறிக்கையில், 'எங்கள் கடற்படையை நாங்கள் தொடர்ந்து பலப்படுத்தி நவீனமயமாக்குகிறோம், சந்தையில் மிகவும் விரிவான கடல் மற்றும் குறுகிய கடல் கப்பல் நெட்வொர்க்கிற்கு தேவையான அளவை எங்களுக்கு வழங்குகிறோம்.'