2 ஆண்டுகளுக்கு பிறகு ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தடையை நீக்குவதாக அறிவித்த மெட்டா நிறுவனம்

#America #President #Social Media #world news #Tamilnews #Lanka4
Prasuat month ago

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.

இதனிடையே கடந்த ஆண்டு twitter நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கியவுடன் ட்ரம்புக்கான தடையை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது 

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ட்ரம்பிற்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதனால் டிரம்பை பின் தொடரும் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.