பாலை எத்தகைய உணவின் பின் உடனே குடித்தலாகாது.

#ஆரோக்கியம் #உணவு #உடல் #பால் #குடித்தல் #Health #Milk Powder #Body #Food #drink
Kesariat month's ago

பால் ஒரு நிறை உணவு. நிறை உணவு என்பதற்கான காரணம் தரமான பாலில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அவை உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானவைதான் என்றாலும் பால் பருகுகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

குறிப்பாக பால் பருகுவதற்கு சற்று முன்பு சில உணவுகளை தவிர்க்கவேண்டும். அது பற்றி பார்ப்போம்!

சிட்ரஸ் வகைப்பழங்கள்:

பால் பருகுவதற்கு முன்பு புளிப்பு தன்மை கொண்ட பழங்களை உட்கொள்ளக்கூடாது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு பால் பருகினால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் கழித்துதான் பால் பருக வேண்டும்.

இத்தகைய பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடித்தால் பாலில் இருக்கும் கால்சியம் பழத்தின் என்சைம்களை உறிஞ்சிவிடும். மேலும் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் உடலில் சேராது. இதுதவிர சிட்ரஸ் பழங்கள் செரிமானத்தையும் பாதித்துவிடும். அதனால் ஜீரண பிரச் சினைகளும் தோன்றும்.

உளுந்தம் பருப்பு:

உளுந்தம் பருப்பு கலந்த உணவு பொருட்களை சாப்பிட்டதும் பால் பருகக்கூடாது. அது செரிமானத்தை பாதிக்கும். பாலையும், உளுந்தம் பருப்பு உணவுகளையும் ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு ஏற்றதல்ல. அதனால் வயிற்று வலி, வாந்தி உருவாகும். உடல் பருமனும் ஏற்படும். தேன், மோர், முளைத்த தானியங்கள் மற்றும் மீன் ஆகியவற்றையும் உளுந்தம் பருப்பில் தயாரித்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

காய்கறிகள்

சில காய்கறிகளான பாகற்காய், வெண்டைக்காய் முள்ளங்கி – பெர்ரி போன்றவைகளை சாப்பிட்ட உடன் பால் பருகினால், முகத்தில் கறுப்பு புள்ளிகள் அல்லது  சரும பாதிப்புகள் உருவாகலாம்.

மீன்:

மீன் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை சாப்பிட்டதும் பால் பருகினால்  உணவு விஷமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. வயிற்றுவலி, சருமத்தில் வெண் புள்ளிகள் ஏற்படவும் செய்யும். மீன் வெப்பத்தன்மை கொண்டது. பால் குளிர்ச்சியானது. இவை இரண்டும் உடலில் ஒன்றாக சேரும்போது உடலில் தேவையற்ற ரசாயன மாற்றங்கள் ஏற்படும். அது ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

எனவே நாம் பாலை உணவு உட்கொண்ட உடன் குடிப்பதை விட்டு தாமதித்து பருகினால் நல்லது. அல்லது இரவு வேளைகளில்  துாங்குவதற்கு முன் குடிப்பதனால் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.