வெல்லவாயவில் காணாமல் போன சிறுமி பண்டாரவளை வாரச்சந்தையில் மீட்பு

Pratheesat month ago

கடந்த 10ஆம் திகதி காணாமல் போயிருந்த வெல்லவாய பள்ளிவாசலுக்கு அருகில் வசித்து வந்த சேத்மி அன்சிகா என்ற ஐந்து வயது சிறுமிஇ பண்டாரவளை  வாரச்சந்தை பிரதேசத்திற்கு அருகில் வெல்லவாய பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சிறுமிக்கு (கடந்த 11ஆம் திகதி) யோகட்  வாங்கி கொடுக்கப் போவதாகக் கூறி அழைத்துச் சென்ற வெல்லவாய பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும்  தியத்தலாவ குருத்தலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுத்தா என அழைக்கப்படும்  கூலித் தொழிலாளியான இவர் அந்த குடும்பத்துடன் நெருங்கிய உறவை பேணி சில நாட்களாக வீட்டில் தங்கியுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியை வெல்லவாய நகருக்கு அழைத்துச் சென்று பண்டாரவளை பகுதிக்கு செல்லும் பேருந்தில் பண்டாரவளை  வாரச்சந்தை வரை சென்று இரவை அங்கேயே கழித்துள்ளார்.

மறுநாள் காலை அவரும் சிறுமியும் தியத்தலாவ குருத்தலாவவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது பண்டாரவளை  வாரச்சந்தையில்  வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் சிறுமியை பணத்திற்காக சிலருக்கு விற்பனை செய்ய தயார் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் வெல்லவாய பொலிஸாரால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.