திரு பொன்னம்பலம் தங்கராசா

Rehaat month's ago

உங்கள் உயிர் பிரிந்தாலும்
நீங்கள் எம்முள்த்தான்
அடக்கம். 
உங்கள் உடலை
மண் விழுங்கலாம்
உங்கள் உயிரையும்
நீங்கள் என் தாய்க்குள்
விதைத்து வித்தாகிக்
கொத்தாகி
விட்டுச் செல்லும் 
சொத்தை
எம்மையும் 
அந்த ஆண்டவனாலும்
களவாடவோ, மடை மேவவோ
முடியாது. 
நீங்கள் பேசாமலே கற்றுத் தந்த
பேராயிரம் பாடங்கள்
உங்கள் வித்துத் தொடரில்
தொடர்கிறது. 
உங்களில் எனக்குப் பிடித்ததே. 
மௌனமாக 
செயலில் பேசும் பேச்சு. 
நீங்கள் ஒரு பாடசாலைப்
படிப்பு படிக்காத மேதை. 
இருக்கும் போது
உங்கள் சிரிப்பை
ரசிக்க நான் மறந்ததுண்டு. 
உயிர் பிரிந்த பின்னர்
அதனை தேடுகிறது மனம். 
மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்கம். 
அது உங்களால் விட்டுச் செல்லப்பட்ட தேக்கம். 
உங்களை உங்களோடுதான் ஒப்பிட முடியும். 
உங்கள் பொறுமையை
பார்த்தாவது நான்
தொடர முயல்கிறேன். 
இப்போ உங்கள்
உளியை எமது கையில்
கொடுத்துள்ளீர்கள். 
அதையும் நீங்களே
சூட்சுமமாக வழி நடத்துங்கள். 
எமது விரல்கள்
இப்பொழுதும் உங்கள்
பிடியில் நடை பழகும் 
நிலையில்தான் இருக்கிறது. 
பணம், பட்டம், பதவி, புகழ்
எல்லாமே போலி. 
என்றும் உங்கள் பார்வைக்குள்
நாங்கள்….
உடல் இறக்கலாம். 
உயிர் பிறக்கும். 
அடுத்தகதவை திறக்கும். 
மேதையே…
போய் வா…