வீட்டில் சுவர்க்கடிகாரம் எத்திசையில் வைப்பது நல்லது..?

Nila
3 years ago
வீட்டில் சுவர்க்கடிகாரம் எத்திசையில் வைப்பது நல்லது..?

ஒவ்வோர் வீட்டிலும் சுவர்க் கடிகாரம் அவசியமாக இருக்கும். ஆனால் வாஸ்து முறைப்படி சுவர் கடிகாரம் வைக்க வேண்டிய சரியான திசை  எது தெரியுமா...?

வாஸ்து சாஸ்திர கூற்றுப்படி, வீட்டில் உள்ள சில பொருட்கள், விஷயங்கள் சரியான திசையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். சில பொருட்களை சரியான திசையில் வைப்பது அவசியம். அப்படி வைக்கவில்லை என்றால் சில வாஸ்து குறைபாடுகள் ஏற்படலாம்

அந்த வகையில்  வீட்டில் இருக்கு கடிகாரத்தை குறிப்பிட்ட திசையில் வைப்பது மிகவும் முக்கியம். தவறான திசையில் வைப்பதால் நம்முடைய நிதி நிலை, மன அமைதி மற்றும் உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படலாம்.

கடிகாரத்தை வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

இப்படி ஒரு கடிகாரத்தை வீட்டில் வைக்க வேண்டாம்

வாஸ்து சாஸ்திரப்படி, உடைந்து போன கடிகாரத்தை நம் வீட்டில் ஒருபோதும் வைத்திருக்க வேண்டாம். இதனால் வீட்டில் இருக்கும் நல்ல நிலையை கெடுத்துவிடும்.

உடைந்து போன அல்லது நின்று போன கடிகாரத்தை உடனே சரி செய்துவிடவும். இல்லையெனில் அதை உடனே அகற்றிவிடுவது அவசியம். உடைந்த கடிகாரம் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

கடிகாரத்தை தெற்கு, மேற்கு திசையில் வைக்க வேண்டாம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கடிகாரத்தை தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்படும். கடிகாரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது உத்தமம்.

வெளிர் நிறத்தில் உள்ள கடிகாரத்தை வைக்கவும் :

வீட்டில் அடர் நிறத்தில் இருக்கும் கடிகாரத்தைப் பயன்படுத்த வேண்டாம். எப்போதும் வெளிர் நிறத்தில் (light colored) கடிகாரத்தைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!