அடி வயிற்று உறுப்புகளை வலுவாக்கும் ஆசனம் - காருஞ்சாசனம்

Nila
2 years ago
அடி வயிற்று உறுப்புகளை வலுவாக்கும் ஆசனம் - காருஞ்சாசனம்

யோகாசனம் ஒவ்வோர் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. மிகவும் அவசியமானது. ஒவ்வோர் உறுப்புக்களுக்கும், ஒவ்வோர் வியாதிகளுக்குமென யோகாசனத்தில் பல்வேறுபட்ட ஆசனங்கள் உள்ளன.

அந்த வகையில் அடிவயிற்று உறுப்புகளை வலுவாக்கும் ஆசனம் காருஞ்சாசனம் :

இவ் ஆசனத்தை செய்வதனால் என்ன பயன், அதை எவ்வாறு செய்வதென்பது பற்றி பார்ப்போமானால்...,

  • தொடை தசை நாரை நீட்சி செய்கிறது.
  • அடிவயிற்று உறுப்புகள் மற்றும் இதயத்தை ஊக்கப்படுத்துகிறது.
  • மார்பு பகுதியை விரிவடையச் செய்கிறது.


செய்முறை :

  • விரிப்பில் உங்கள் கால்களை முன்னால் முழுமையாக நிலையாக (அசைவில்லாமல்) நீட்டி கொண்டு உட்காரவும்.
  • இந்த ஆசனத்தை செய்யும் போது நிலையான மற்றும் சரியான கவனத்தை செலுத்துவது மிக அவசியம்.
  • பின் உங்கள் வலது காலை மடித்து உங்கள் இடுப்பின் கீழ் செருகிக் கொள்ளவும்.
  • இந்த நிலை பாதி வீராசனம் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் வலது முட்டியை வளைத்து உங்கள் வலது கையை உபயோகித்து உங்கள் வலது பாதத்திற்கு மேல் தூக்கவும்
  • இப்போது உங்கள் இடது கையையும் உங்கள் வலது காலின் கணுக்காலுக்கு பின்னால் வைத்துக் கொள்ளவும்.
  • முட்டியின் உள்பக்கம் தோள் பக்கம் செல்ல வேண்டும் மற்றும் கால் லேசாக தலைக்கு மேல் இருக்க வேண்டும்.
  • உங்கள் கால்களை எவ்வளவு தலைக்கு அருகில் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு இழுக்க வேண்டும்.
  • இந்த நிலையில் 30 விநாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை இருந்து பின் சில விநாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் அடுத்த காலிலும் செய்யுங்கள்.

நன்மைகள் :

  • தொடை தசை நாரை நீட்சி செய்கிறது. அடிவயிற்று உறுப்புகள் மற்றும் இதயத்தை ஊக்கப்படுத்துகிறது.
  • மார்பு பகுதியை விரிவடையச் செய்கிறது. கணுக்கால் அல்லது முட்டி காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை குணப்படுத்தும்.