உத்தர பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்ட புதிய சட்டம்

Nila
3 years ago
உத்தர பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்ட புதிய சட்டம்

பரப்பளவில், நான்காவது பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் மக்கட் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், உத்தர பிரதேசத்தில் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும்,  அரசு சலுகைகள் இரத்து செய்யப்படும் எனவும்,  தேர்தலில் போட்டியிட முடியாது' எனவும் குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இரண்டுக்கு உட்பட்ட குழந்தை மட்டுமே உள்ளவர்களுக்கு வட்டியில்லாக் கடன், குடிநீர், மின்சாரம், வீட்டு வரிகளில் தள்ளுபடி, காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இப் புதிய சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விவாகரத்துப் பெற்றோர், விதவையர் போன்றவர்கள் குறித்து இம் மசோதாவில் விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!