தவிர்க்க வேண்டிய மூச்சு பயிற்சிகள்

Nila
3 years ago
தவிர்க்க வேண்டிய மூச்சு பயிற்சிகள்

கொரோனா வைரஸ் நுரையீரல் திசுக்களை கடுமையாக சேதப்படுத்தும் சுவாச நோயாக கருதப்படுகிறது. சுவாசக்குழாய் வழியாக நுழைந்து சளி, மூச்சுத்திணறலை உருவாக்கி பாதிப்பை அதிகப்படுத்தக்கூடியது. கொரோனாவின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துவதற்கு சுவாச அமைப்பை வலுப்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், சுவாச மண்டலம் சுத்தப்படுத்தப்படும். அதனால் நுரையீலுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். எனவே பலரும் சுவாச பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். எனினும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்கள் ஒருசில சுவாச பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. அவை சுவாசக்குழாய்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி பாதிப்பை உருவாக்கக்கூடியவை. அப்படி தவிர்க்க வேண்டிய 3 சுவாச பயிற்சிகள் இதோ..தவிர்க்க வேண்டிய மூச்சு பயிற்சிகள்

கபல்பதி பிராணயாமா: கபல் என்றால் மண்டை ஓடு என்று பொருள். பதி என்றால் ஒளிா்தல் என்று அர்த்தம். பொதுவாக மூச்சு பயிற்சியை செய்யும் போது உடலில் வெப்பம் உண்டாகும். அந்த வெப்பம் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவும். வளர்சிதை மாற்றம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயல் பாடும் மேம்படும்.

ஆனால் கபல்பதி பிராணயாமா என்பது மேம்படுத்தப்பட்ட மூச்சுப் பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை செய்யும்போது உடலில் உள்ள உள் உறுப்புகளில் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். கொரோனா பாதிப்பு மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும் போது இந்த மூச்சு பயிற்சியை செய்தால், மூச்சுத் திணறலையும், மயக்கத்தையும் ஏற் படுத்தக்கூடும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், அல்சர் பாதிப்புக்கு ஆளானவர்கள் இந்த மூச்சு பயிற்சியை தவிர்த்துவிடுவது நல்லது.

மூா்ச்சா பிராணயாமா: மூா்ச்சா என்றால் மயக்கம் என்று பொருள். அதாவது இந்த மூச்சு பயிற்சி மயக்கத்தை உண்டாக்கக்கூடியது. இதனை செய்யும் போது மெதுவாக மூச்சை உள் இழுத்து விடவேண்டும். இதுவும் மேம் படுத்தப்பட்ட மூச்சு பயிற்சி ஆகும். இந்தப் பயிற்சியைச் செய்யும் போது ஒரு விதமான மயக்க உணா்வையோ அல்லது மிதப்பது போன்ற உணர்வையோ உண்டாகும்.

ஆதலால் கொரோனா பாதிப்பில் இருப்பவர்கள், மீண்டு வந்திருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்வதற்கு முயற்சிக்கக்கூடாது. நீண்ட நேரம் மூச்சை உள் இழுத்து நிறுத்தி வைக்கும்போது மயக்கம் உண்டாகும். அத்துடன் கொரோனா பாதிப்பில் இருந்து குண மடைந்து வரும் நுரையீரலுக்கு மேலும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பஸ்ட்ரிகா பிராணயாமா: இந்த மூச்சுப்பயிற்சி கபல்பதி பிராணயாமாவை ஒத்திருப்பது போல் தெரியும். ஆனால் இரண்டுமே வேறுபட்டவை யாகும். இந்த மூச்சு பயிற்சி செய்யும்போது மிகவும் விரைவாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். சட்டென்று மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதால் பார்ப்பதற்கு இந்த மூச்சு பயிற்சி எளிமையானது போல் தெரியும். ஆனால் அப்படி மூச்சை உள் இழுக்கும்போது அதிகமான வெப்பத்தை உருவாக்கி விடும். அது உடலுக்குள் ஊடுருவி நுரையீரலுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கும்.

சாதாரணமாக இந்த மூச்சு பயிற்சியில் ஈடுபட்டாலே சிலருக்கு மூச்சுத்திணறலையும், மயக்கத்தையும் ஏற்படுத்திவிடும். அப்படி இருக்கையில், கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டால் விபரீதமாகிவிடும். அத்துடன் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் இந்த மூச்சு பயிற்சியை தவிர்த்துவிடுவது நல்லது..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!