வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சைப்பழம், மிளகாய் கட்டுவது எதற்காக?!
* வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சைப்பழம், மிளகாய் கட்டுவது எதற்காக?
எலுமிச்சைப்பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவானது ஓட்டுநரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக்கொள்கிறது.
* சுபகாரியங்கள் செய்யும் போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ தும்மல் வந்தால் அது கெட்ட சகுனம் என்று சொல்கிறார்கள் எதனால்?
இதற்கு காரணம், தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயம் தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும்போது தும்மினால், உடம்பு சுகமில்லை போக வேண்டாம் என்றும், ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம்.
* இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்தவர்கள் கொள்ளைப்புறம் வழியாக வர வேண்டும் என்று அக்காலத்தில் சொன்னார்கள். அது எதற்காக தெரியுமா?
முந்தைய காலத்தில் குளியலறை வீட்டிற்கு வெளியில் உள்ள கொள்ளைப்புறத்தில் தான் இருக்கும். நோய்க்கிருமிகள் நம்மை அண்டாமல் இருக்க குளித்துவிட்டு தான் வர வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த யுக்தி பின்பற்றப்பட்டது.
* சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்திருக்க வேண்டும் என்று கூறுவது எதற்காக?
சூரிய உதயத்திற்கு முன் எழுந்தால் மனமும், மனநிலையும் நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். மேலும் முன்னறிவித்த நாளுக்குத் திட்டமிடுவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் நமக்கு போதுமான நேரம் இருக்கும் என்பதற்காகத்தான்.